Home  /  Shop  /  POOJA ITEM  /  DEVATHARU BRACELET 8MM AND 6MM
DEVATHARU BRACELET  8MM AND 6MM
DEVATHARU BRACELET  8MM AND 6MM
POOJA ITEM

DEVATHARU BRACELET 8MM AND 6MM

☆☆☆☆☆ (0 reviews)
₹330 ₹420 21% OFF
In Stock (25 available)
Select Option:
Category: POOJA ITEM
தேவதாரு மரம் வரலாறு
தேவதாரு மரமானது பண்டைய வேத காலத்திலிருந்தே இந்துக்களிடையே தெய்வீக மரமாக வணங்கப்படுகிறது, மேலும் இது தொடர்பான பல புராணக்கதைகளும் உள்ளன. நமது பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேத/சித்த மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக தேவதாரு பயன்படுத்தப்படுகிறது. தேவதாரு மரத்தினால் செய்யப்பட்ட பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் லட்சுமி தேவி குடியிருப்பாள் என்று நம்பப்படுகிறது. மேலும், தேவர்களையும் வசியம் செய்யும் சக்கியை இந்த தேவதாரு கொண்டுள்ளது. இதன் நன்மைகள் ஆன்மிகத்தில் அளப்பரியதாகும்.

தேவதாரு மாலை பயன்கள்
தேவதாரு மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களில் ஒன்று தேவதாரு மாலை ஆகும். இந்த மாலை பிரபஞ்சதில் உள்ள நேர்மறையான சக்திகளை தன்னுள் சேமித்து, வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. தேவதாரு மரத்தினுடைய மையப் பகுதியை வட்ட வடிவ மணிகளாகச் செய்து, செப்புக் கம்பி அல்லது பருத்தி நூலைப் பயன்படுத்தி மாலையாக செய்யப்படுகிறது.

ஒரிஜினல் தேவதாரு மாலை அணிவதால் செய்யும் காரியத்தில் வெற்றி, புதிய அதிகாரம், தலைமைப் பண்புகள், மனதில் தைரியம், அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு மற்றும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் தருகின்றது.

அசல் தேவதாரு மாலை சூரிய தோஷத்தின் விளைவுகளை குறைக்க உதவுகிறது, மேலும் வலிமை மற்றும் தைரியமின்மை, தன்னம்பிக்கை இல்லாமை, சுயமரியாதை இல்லாமை, ஊக்கமின்மை மற்றும் முயற்சியின்மை ஆகியவற்றை நீக்குகிறது, ஆற்றலை அதிகரிக்கிறது மற்றும் கண்பார்வை அதிகரிக்கிறது.

இந்த தேவதாரு மாலையைக் கொண்டு தியானம் செய்யலாம், மந்திரங்கள் ஜெபிக்கலாம், தெய்வ சிலைகளுக்கு மாலையாக போடலாம்.

தேவதாரு மணி மாலை அணிவது வீடு மற்றும் பணியிடத்தில் இருந்து எதிர்மறை ஆற்றலை நீக்க உதவுகிறது.

தேவதாரு மாலை அணிவது சிவன் மற்றும் விஷ்ணு போன்ற தெய்வங்களின் அருளை ஈர்க்க உதவுகிறது.

தேவதாரு மாலையின் மணம் ஞாபகசக்தி மற்றும் செறிவை மேம்படுத்துகிறது.

தேவதாரு மரம் வலி நிவாரணி பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது, இது தலைவலியைக் குறைக்க உதவும்.

தேவதாரு மாலையை பெண்கள் அணியலாமா?
ஆண், பெண், பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் இந்த தேவதாரு மாலை அணியலாம்.

மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களும் தேவதாரு மாலையை அணியலாம்.

திருமணமானவர்களும் இந்த மாலையை அணிந்து கொள்ளலாம்.

தேவதாரு மாலை அணியும் முறை
தேவதாரு மாலையை நல்ல நேரத்தில் உங்கள் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை பூஜை செய்து வணங்கி கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.

இயற்கையாக எதிர்பாராமல் நடக்கும் எந்த நிகழ்வின் போதும் தேவதாரு ஜெபமாலை அணிந்திருப்பது தவறில்லை.

குளிக்கும் போது சோப்பு மற்றும் ஷாம்பில் உள்ள ரசாயனங்கள் மாலையை சேதப்படுத்தாமல் இருக்க அப்போது கழற்றி விட்டு குளித்த பின்னர் அணிந்து கொள்ளலாம்.

மேலும் நூலில் கோர்க்கப்பட்ட மாலையாக இருந்தால் தூங்கும் போது கழட்டிவிட வேண்டும். வெள்ளி அல்லது செப்பு கம்பியில் கோர்க்கப்பட்ட மாலையாக இருந்தால் தூங்கும் போதும் அணிந்து கொள்ளலாம்.

தேவதாரு மாலையை எப்போது அணியக்கூடாது?
அசைவ உணவுகளை எடுத்து கொள்ளும் போது தேவதாரு மாலை அணிவதை தவிர்க்கவும். அப்படி எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தால் அசைவம் உண்ட பின்பு 8 முதல் 10 மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து விட்டு மீண்டும் மாலையை அணிந்து கொள்ளலாம்.

எதிர்பாராமல் நிகழும் இறப்பு/ஈமச்சடங்கு கலந்து கொள்ளும் போது தேவதாரு மாலை அணியக்கூடாது, வீட்டிற்கு வந்து தலைக்கு குளித்து விட்டு மீண்டும் மாலையை அணிந்து கொள்ளலாம்.

Please login to write a review.

No reviews yet. Be the first to review!